பெண்களுக்கு முடி அடர்த்தியாக வளர உபயோகமான தகவல்..!
பெண்களுக்கு முடி அடர்த்தியாக வளர உபயோகமான தகவல் !!பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை.
அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர்.
அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது. மேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்…
1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.
3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.
7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.
8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.
9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
அஜீத்துக்கு இணையான பாத்திரம் சிம்புவுக்கு - ஓரே படத்தில்
எனக்கு இணையான பாத்திரம் சிம்புவுக்கு இருக்க வேண்டும், அஜீத்தின் அன்பு கட்டளை:-
வீரம் வெற்றிக்குப் பிறகு அஜீத், கவுதம் மேனன் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது. தற்போது சிம்புவை வைத்து குறுகியகால தயாரிப்பாக ஒரு படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கும் கவுதம் அதை முடித்து விட்டு அஜீத் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார்.
இந்தப் படத்தில் அஜீத்துடன், சிம்புவும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்புவை அஜீத்துக்கு ரொம்பவும் பிடிக்கும்.
சமீபத்தில்கூட தி.மு.கவில் டி.ராஜேந்தர் சேர்ந்த செய்தி கேள்விப்பட்டு சிம்புவுடன் பேசிய அஜீத். உங்க படத்துக்கு பொலிட்டிக்கல் பிரஷர் எதுவும் வராம கவனமா பார்த்துக்குங்கன்னு அட்வைஸ் பண்ணினாராம்.
இப்போது ஆரம்பத்தில் ஆர்யா, வீரத்தில் விதார்த்துக்கு வாய்ப்பு கொடுத்ததைப்போல அடுத்த படத்தில் சிம்புவுக்கு கொடுக்கப் போகிறார். அவருக்கு ஒரு பவர்புல் கேரக்டரை உருவாக்குமாறு கவுதம் மேனனுக்கு உத்தரவிட்டிருக்கிறார். சிம்புவின் நண்பரான கவுதம் மேனனும் உற்சாகத்தோடு களத்தில் இறங்கிவிட்டார்.
அவசர உலகில் அவசியம் செய்ய வேண்டியவை...
பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. அழகை அழகூட்டும் பப்பாளியைப் பற்றி இன்னும் சில அழகு டிப்ஸ்….
* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் ‘ப்ரெஸ்’ ஆக காணப்படுவீர்கள்.
* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.
* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.
* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.
* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.
* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.
* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
* பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
* பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
* பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
நவரச நாயகனின் அதிரடி கெட்டப்...
2012-ஆம் ஆண்டு வெளியான ‘மாற்றான்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக அமிரா தஸ்தூர் நடிக்கிறார்.
‘அனேகன்’ என்றால் உருவத்தில் ஒன்றானவன், வீரத்தில் பலவானவன் என்று பொருளாம். அதற்கேற்றார்போல் இப்படத்தில் தனுஷ் சென்னையில் வாழும் சேரி பையனாகவும், சுருட்டை முடியுடனும், கராத்தே வீரராகவும், ஸ்டைலிஷ் தோற்றத்துடனும் வருகிறார்.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் கார்த்திக் வில்லனாக நடிக்கிறாராம். இவருக்கு ‘மங்காத்தா’ படத்தில் அஜீத் நடித்திருந்தது போன்ற வித்தியாசமான வில்லன் கதாபாத்திரமாம்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ‘மாற்றான்’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்துடன் மீண்டும் கைகோர்த்துள்ளது இந்நிறுவனம்.
உலகளாவிய எம்.பி.ஏ., படிப்பு - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!
உலகளாவிய எம்.பி.ஏ., படிப்பு:-
ஒப்பீட்டளவில், இந்தப் படிப்பு செலவு மிகுந்தது. ஏற்கனவே, நடுத்தர மற்றும் சீனியர் நிலையில், ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நபர்களுக்கு இப்படிப்பு மிகவும் ஏற்றது.
இந்தப் படிப்பை, இந்தியாவில், ஒரு சில கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. இந்தியாவின் ஐ.ஐ.எம்., பெங்களூர் மற்றும் பிரிட்டன், கனடா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைச் சேர்ந்த தலா 1 பிரபல வணிகப் பள்ளிகள் இணைந்த கூட்டு முயற்சியின் மூலம், மேலாண்மை கல்வியில், International Masters Programme in Practicing Management(IMPM) என்ற படிப்பு வழங்கப்படுகிறது.
இப்படிப்பை மேற்கொள்ள, ஒரு நபருக்கு 60,000 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன. இந்தத் தொகையில், பயணம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் உள்ளடங்காது. மாறாக, கல்வி மற்றும் Inter-modular support போன்றவை அடங்கும்.
பெங்களூரிலுள்ள கிறைஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகம் என்ற இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து, MBA-MS என்ற படிப்பை வழங்குகின்றன. இப்படிப்பிற்கு 14 முதல் 15 லட்சங்கள் செலவாகும்.
Krannert School of management of Purdue university, Universidad Puebla, Mexico, Tianjin University, China ஆகிய சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, ஐ.ஐ.எம்., உதய்ப்பூர், குளோபல் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் என்ற ஸ்பெஷலைசேஷனில் 15 மாத dual degree executive MBA படிப்பை வழங்குகிறது. அமெரிக்காவில் படிக்கும் காலத்திற்கான கட்டணம் 20 ஆயிரம் டாலராகவும், இந்தியாவில் படிக்கும் காலத்திற்கான கட்டணம் ரூ.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கேஸ் வெஸ்டர்ன் பல்கலையின், வெதர்ஹெட் மேலாண்மை கல்வி நிறுவனம், ஷாங்காயின் டோங்ஜி பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து, குளோபல் எம்.பி.ஏ., படிப்பை XLRI வழங்குகிறது. இந்த 3 நாடுகளின் 60 மாணவர்களும், தங்களின் முதல் பருவ படிப்பை டோங்ஜி பல்கலையிலும், இரண்டாம் பருவ படிப்பை XLRI கல்வி நிறுவனத்திலும், மூன்றாம் பருவ படிப்பை கேஸ் வெஸ்டர்ன் கல்வி நிறுவனத்திலும் மேற்கொள்வார்கள்.
அதேசமயம், நான்காம் பருவ படிப்பை, உள்ளூர் பட்டப்படிப்பு ரீதியான செயல்பாட்டுத் தேவைகளுக்காக, இந்த 60 மாணவர்களும், அவரவர் சொந்த நாடுகளுக்கே சென்று, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் மேற்கொள்வார்கள்.
இந்த 2 வருட படிப்பிற்கு மொத்தம் ரூ.25 லட்சம் செலவாகிறது. சமுதாயத்திற்கு நீடித்த பொருளாதார வளர்ச்சியை தரக்கூடிய உலகளாவிய தலைவர்களை இந்தப் படிப்பு உருவாக்கும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பீட்டளவில், இந்தப் படிப்பு செலவு மிகுந்தது. ஏற்கனவே, நடுத்தர மற்றும் சீனியர் நிலையில், ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நபர்களுக்கு இப்படிப்பு மிகவும் ஏற்றது.
இந்தப் படிப்பை, இந்தியாவில், ஒரு சில கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. இந்தியாவின் ஐ.ஐ.எம்., பெங்களூர் மற்றும் பிரிட்டன், கனடா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைச் சேர்ந்த தலா 1 பிரபல வணிகப் பள்ளிகள் இணைந்த கூட்டு முயற்சியின் மூலம், மேலாண்மை கல்வியில், International Masters Programme in Practicing Management(IMPM) என்ற படிப்பு வழங்கப்படுகிறது.
இப்படிப்பை மேற்கொள்ள, ஒரு நபருக்கு 60,000 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன. இந்தத் தொகையில், பயணம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் உள்ளடங்காது. மாறாக, கல்வி மற்றும் Inter-modular support போன்றவை அடங்கும்.
பெங்களூரிலுள்ள கிறைஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகம் என்ற இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து, MBA-MS என்ற படிப்பை வழங்குகின்றன. இப்படிப்பிற்கு 14 முதல் 15 லட்சங்கள் செலவாகும்.
Krannert School of management of Purdue university, Universidad Puebla, Mexico, Tianjin University, China ஆகிய சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, ஐ.ஐ.எம்., உதய்ப்பூர், குளோபல் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் என்ற ஸ்பெஷலைசேஷனில் 15 மாத dual degree executive MBA படிப்பை வழங்குகிறது. அமெரிக்காவில் படிக்கும் காலத்திற்கான கட்டணம் 20 ஆயிரம் டாலராகவும், இந்தியாவில் படிக்கும் காலத்திற்கான கட்டணம் ரூ.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கேஸ் வெஸ்டர்ன் பல்கலையின், வெதர்ஹெட் மேலாண்மை கல்வி நிறுவனம், ஷாங்காயின் டோங்ஜி பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து, குளோபல் எம்.பி.ஏ., படிப்பை XLRI வழங்குகிறது. இந்த 3 நாடுகளின் 60 மாணவர்களும், தங்களின் முதல் பருவ படிப்பை டோங்ஜி பல்கலையிலும், இரண்டாம் பருவ படிப்பை XLRI கல்வி நிறுவனத்திலும், மூன்றாம் பருவ படிப்பை கேஸ் வெஸ்டர்ன் கல்வி நிறுவனத்திலும் மேற்கொள்வார்கள்.
அதேசமயம், நான்காம் பருவ படிப்பை, உள்ளூர் பட்டப்படிப்பு ரீதியான செயல்பாட்டுத் தேவைகளுக்காக, இந்த 60 மாணவர்களும், அவரவர் சொந்த நாடுகளுக்கே சென்று, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் மேற்கொள்வார்கள்.
இந்த 2 வருட படிப்பிற்கு மொத்தம் ரூ.25 லட்சம் செலவாகிறது. சமுதாயத்திற்கு நீடித்த பொருளாதார வளர்ச்சியை தரக்கூடிய உலகளாவிய தலைவர்களை இந்தப் படிப்பு உருவாக்கும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சினிமா தயாரிப்பில் தீவிரம் காட்டும் சூர்யா..!
சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்களுக்கு நல்ல காலம் பிறந்திருப்பதாக துணை இயக்குநர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
'சிங்கம் 2' படத்தின் மூலம் படத்தயாரிப்பிலும் ஈடுபட தீர்மானித்தார் சூர்யா. தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு தனது குழந்தைகளின் பெயரான தியா, தேவ் ஆகியோரது முதல் எழுத்தை வைத்து 2D எண்டர்டெயின்மென்ட் என்று ஆரம்பித்தார்.
அப்படத்தினைத் தொடர்ந்து சூர்யா தயாரிக்கவிருக்கும் படங்கள் பற்றிய செய்தியோ, என்ன மாதிரியான கதைகளைக் கேட்கிறார் என்பது பற்றியோ தகவல்கள் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்று வந்த இணை இயக்குநர் ஒருவரைச் சந்தித்த போது, பெயர் வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நம்மிடையே பேசினார். "சூர்யாவின் தயாரிப்பு அலுவலகத்திற்கு யார் சென்றாலும் உடனடியாக ஒரு படிவத்தினைக் கொடுத்து நிரப்பச் சொல்லுவார்கள். அப்படிவத்தில் பெயர் மற்றும் கைபேசி எண், படிப்பு, ஊடகத் துறைக்கு வரும் முன்பு செய்த வேலை, பொழுதுபோக்கு, ஊடகத் துறையில் அனுபவம், கதை வகை, கதைச்சுருக்கம், இக்கதையின் தனித் தன்மை என்ன? ஏன் இது படம் ஆக்கப்பட வேண்டும்? ஆகிய கேள்விகள் இருக்கும்.
அப்படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இதே போல நிறைய பேர் கொடுத்திருக்கிறோம். படத்தின் பட்ஜெட் 2 கோடிக்கு மிகாமல் இருப்பது போல தான் கதைகளைக் கேட்கிறார்கள். எனது கதையும் அதற்குள் தான் திட்டமிட்டிருக்கிறேன். கண்டிப்பாக எனது கதை சூர்யாவிக்கு பிடிக்கும். எனக்கு கண்டிப்பாக வாய்ப்பிருக்கு" என்று சந்தோஷம் பொங்க பேசினார்.
ஆகவே, இயக்குநராக வேண்டும் என்று கதை எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் கதவு திறந்திருக்கிறது. விரைவில் சூர்யா தயாரிக்கும் படத்தின் இயக்குநர் நீங்களாகவும் இருக்கலாம்.
பேஸ்புக் அக்கௌன்ட்டை தற்காலிகமாக செயலிழக்க(Deactivate) வைப்பது எப்படி..?
பேஸ்புக் மிகப்பிரபலமான சமூக இணையதளம். இணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது பேஸ்புக்காக தான் இருக்கும்.
ஒரு சில நேரத்தில் உங்களுடைய பேஸ்புக் கணக்கை செயலிழக்க செய்ய நீங்கள் நினைக்கலாம் இதற்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளது முக்கியமாக உங்கள் கணக்கை யாராவது ஹாக் செய்தாலோ, இந்த தளதினால் நேரம் வீணாக செலவாகிறது என நினைக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட அக்கௌன்ட் வைத்திருப்பதால் ஒன்றை செயலிழக்க வைக்க நினைக்கலாம் இப்படி பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
ஆதலால் இப்பதிவில் பேஸ்புக் கணக்கை எப்படி செயலிழக்க வைப்பது என பார்ப்போம்.
முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று நீங்கள் செயலிழக்க வைக்க வேண்டிய கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
பிறகு Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
Account Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Security என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
ecurity லிங்கை கிளிக் செய்தவுடன் வரும் விண்டோவில் கீழே இருக்கும் Deactivate your account என்ற ஒரு லிங்க் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
அடுத்து இன்னொரு விண்டோ வரும் அதில் நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில ஆப்ஷன்கள் காட்டும் அதில் உங்களுக்கானத்தை தேர்வு செய்யவும்.
Email opt out என்ற இடத்தில் டிக் மார்க் கொடுக்கவும்(டிக் பண்ணாமல் விட்டால் பேஸ்புக்கில் இருந்து Invitations,Notifications ஈமெயில்கள் வந்து கொண்டே இருக்கும்)
அவ்வளவு தான் உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும். உங்கள் Profile யாராவது ஓபன் செய்தால் கீழே கண்ட செய்தி தான் வரும்.
இந்த கணக்கு தற்காலிகமாக தான் பேஸ்புக் தலத்தில் இருந்து நீக்கப்படும் ஆதலால் இந்த கணக்கை நீங்கள் எப்பொழுது நினைத்தாலும் மீண்டும் செயல் படுத்தி கொள்ளலாம். எப்பொழுதும் போல இந்த கணக்கின் ID, PASSWORD கொடுத்து நுழைந்தால் தானாகவே Reactivate ஆகிவிடும்.
Employment – ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும்.
குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.
குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.
குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான குறிப்பு : உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : RPD2013M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD – என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.
User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
அடல் பிஹாரி வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார்.
நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்படுகிறார்.
இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். ‘லோகமான்ய திலகர் விருது’, ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’, ‘பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ எனப் பல விருதுகளை வென்றுள்ள முன்னாள் பிரதம மந்திரியான அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 25 டிசம்பர் 1924 (வயது 88)
பிறப்பிடம்: குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது), ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா
பணி: அரசியல்வாதி, கவிஞர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில், கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியருக்கு மகனாக ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில், டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
குவாலியரில் இருக்கும் கோர்கியில் உள்ள சரஸ்வதி ஷிஷு மந்திரில் தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், குவாலியர் விக்டோரியா கல்லூரியில் (இப்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். ஆரம்பத்தில் இருந்து படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த அவர், தனது கல்லூரியில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் அதிகமதிப்பெண்கள் வித்தியாசத்தில் தேர்ச்சிப் பெற்று, இளங்கலைப் பட்டம் வென்றார். பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் சேர்ந்த அவர், அரசியலில் முதுகலைப் (எம். ஏ) பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று பெற்றார்.
ஆரம்பகாலப் பணிகள்
தனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ன் ஒரு முழுநேர தொழிலாளியாக மாறினார். சட்டம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட அவர், அதைத் தீவிரமாகப் பயின்றார். இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் தலைவர்களும், புரட்சியாளர்களும் போராடிக் கொண்டிருந்ததால், அவர் சட்டப் படிப்பைப் பாதியிலே கைவிட்டு, ஒரு பத்திரிக்கையாளராக உருவெடுத்தார். பத்திரிக்கையாளராக மாறிய அவர், ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
அரசியல் பிரவேசம்
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார். சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து
மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் அப்போதைய பிரதமராக இருந்த நேருவையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர்ந்ததால், அவர் பலரின் நன்மதிப்பைப் பெற்றார். ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் அவர்கள் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பு, வாஜ்பாயின் கைகளில் வந்தது. 1977ல், அவர் ஜன சங்கை, புதிதாய் உருவான அமைப்பான ஜனதா பார்டியுடன் இணைத்தார். அக்கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதால், அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து, அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. மேலும், 1996ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி வெற்றிக் கோடியை நாட்டியது.
பிரதமராக வாஜ்பாய்
1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா அவர்கள், அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார். இந்தியாவின் 11வது பிரதரமராகப் பதவியேற்ற அவர், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அக்கட்சிக் கலைக்கப்பட்டதால், மறுபடியும் தேர்தல் நடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் விதமாக, அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 மாதங்கள் கழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆதரவைப் பின் வாங்கியதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார்.
இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமூகமான முடிவை அமலாக்க புதிய சமாதான முன்னெடுப்புகளை வரைந்தார். 1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்’ போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற செயல்பாட்டை செயல்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
கார்கில் போரில் வெற்றிப் பெற்றது, அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது. இந்த வெற்றியை நினைவில் நிறுத்தும்படியாக, ஜூலை மாதம் 26 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில், ‘கார்கில் விஜய் திவஸ்’ என நியமிக்கப்பட்ட அவருக்கு, பா.ஜ. க தலைவர் நிதின் கத்காரி அவர்கள், மும்பையில் ஒரு மெழுகு சிலையைத் திறந்து வைத்தார்.
கார்கில் போரில் மிகத் திறமையாக செயல்பட்டதால், 1999 ஆம் ஆண்டில், நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க 303 இடங்களில் அதிக வாக்குகள் வெற்றிபெற்று, அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்கச் செய்தது. மூன்றாவது முறை அவர், பிரதமராகப் பதவியேற்ற பின்னர், காத்மண்டு மற்றும் டெல்லிக்கிடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல், 2001ல் பாராளுமன்றம் மீது தாக்குதல், 2௦௦2ல் குஜராத் வன்முறை, போன்ற பல பிரச்சனைகள் 2004ல் நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க கட்சியைப் பெரும் தோல்வியை சந்திக்க செய்தது.
மூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார்.
எழுத்தாளராக வாஜ்பாய்
அவர், தனது கல்லூரியில் இருந்தே ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆர்வமுடையவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதில் அதிகமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றதால், அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது எனலாம். இதனால், அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தார். தனது சுயசரிதையை எழுதியதோடு மட்டுமல்லாமல், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.
விருதுகள்
- 1992 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- 1993 – கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார்.
- 1994 – ‘லோகமான்ய திலகர் விருது’
- 1994 – ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்கப்பட்டது.
- 1994 – ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார்.
பாக்யராஜ் படத்துக்கு 4 நாட்டிலிருந்து வில்லன்கள்...!
டைரக்டர் கே.பாக்யராஜ் நடிக்கும் படத்திற்காக 4 நாடுகளை சேர்ந்த வில்லன்கள் நடிக்கின்றனர். கதாபாத்திரங்களின் பெயரை டைட்டிலாக வைப்பது பல காலமாக நடக்கிறது.
அந்த வரிசையில் மாணவர்கள் 3 பேர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு அவர்கள் படங்களில் ஏற்கும் கவுதம் கனி கிரேஸ் என்று பெயரே தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
புத்திசாலித்தனமான 3 மாணவர்களின் கதையாக இது உருவாகி இருக்கிறது. விஞ்ஞானி வேடத்தில் கே.பாக்யராஜ் நடிக்கிறார். இதில் வில்லன்களாக நடிப்பதற்கு நான்கு நாடுகளிலிருந்து 4 பேர் அழைத்து வரப்பட்டனர்.
பாகிஸ்தானை சேர்ந்த யாசின், சிங்கப்பூரை சேர்ந்த ஆனந்தராஜ், நைஜீரியாவை சேர்ந்த கிரிஷ், அரேபியாவிலிருந்து அலிபாய் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் மலேசிய நடிகர்கள் டான் சசி, அகோதரன், சங்கீதா, கவிதா, ஜஸ்பீர், மித்ரன், சுகுதபலனட, கிருபாஸ்ரீ உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் ஒளிப்பதிவை மகேஷ் கே.தேவ் செய்ய, ஆதிஷ் இசை அமைக்கிறார். சிவா.ஜி தயாரிக்கிறார். சமீபத்தில் இதன் பாடல், டிரைலர் வெளியிடப்பட்டது. இதன் ஷூட்டிங் மலேசியாவில் நடந்துள்ளது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் இக்கதையில் இடம்பெறுவதால் அதிக செலவில் விஞ்ஞான ஆய்வுகூட செட் போடப்பட்டு அதில் ஷூட்டிங் நடந்தது..
தலைவலியை ஏற்படுத்தும் உணவுகளில் சில..!
இன்றைய காலத்தில் தலைவலி வராமல் இருக்கும் மனிதர்களை பார்க்கவே முடியாது. ஏனெனில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மனஅழுத்தமே, அந்த தலைவலிக்கு காரணம் என்று நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆனால் அதனால் மட்டும் தலைவலி வருவதில்லை,
ஒரு சில உணவுகளை உண்பதாலும் தலைவலி வரும். சிலருக்கு உண்டப்பின் தலைவலி அதிகம் வரும், ஆனால் அப்போது அவர்கள் டென்சனால் தான் தலைவலி வருகின்றது என்று எண்ணுவர். மேலும் தலைவலி வரும்போது அதற்கான மாத்திரைகளை அடிக்கடி போடுவர். ஆகவே இத்தகைய தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள் என்ன என்பதை அறிந்து, அவற்றை அதிகமாக உண்பதை தவிர்த்து, தலைவலி ஏற்படாமல் தடுக்கலாமா!!!
சாக்லேட் :
நிறைய பேருக்கு சாக்லேட் மிகவும் பிடித்ததாக இருக்கும் என்பதால், அவற்றை அடிக்கடி சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது சாக்லேட் நிறைய ஆராய்ச்சியின் மூலம் சாக்லேட் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டு வருகிறது.
அத்தகைய ஒரு ஆராய்ச்சியில் தான், தலைவலியை ஏற்படுத்தும் உணவுப்பொருட்களில் சாக்லேட் ஒன்று என்று தெரியவந்துள்ளது. அந்த சாக்லேட்டில் இருக்கும் பினைல்தைலமின் மற்றும் தியோபுரோமின் என்னும் பொருட்கள் உடலில் இருக்கும் இரத்தக்குழாய்களின் அளவை நீட்டிக்கச் செய்து, தலைவலியை ஏற்படுத்துகின்றன.
சீஸ் :
சீஸ் கூட தலைவலியை ஏற்படுத்தும். ஏனெனில் சீஸில் இருக்கும் நொதிப்பொருளான தைரமின், உடலில் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். அதன் விளைவு தலைவலியில் முடியும். அதிலும் பழைய சீஸில் அதிகமான அளவு தைரமின் இருக்கிறது. ஆகவே பழைய சீஸ் சாப்பிடுவதை தவிர்த்து, புதியதை எப்போதாவது மட்டும் சாப்பிட்டால் நல்லது.
மதுபானம் :
அனைத்து மதுபானங்களும் தலைவலியை ஏற்படுத்தும், அதிலும் ரெட் ஒயின் சொல்லவே வேண்டாம். ஏனெனில் மதுபானங்கள் இரத்த ஒட்டத்தை சரியாக அளவில் ஓடச் செய்யாமல், அதிகமான அளவில் மூளைக்கு பாயும் படிச் செய்யும் இதனால் தான், அதைக் குடித்த பின்னர் வரும் தலைவலியைத் தாங்க முடியாமல் இருக்கும். மேலும் ரெட் ஒயினில் தலைவலியை ஏற்படுத்தும் பொருட்களில் ஒன்றான சல்பைட் அளவுக்கு அதிகமாக உள்ளது.
காபி :
அலுவலகங்களில் தலைவலி குறையும் என்று நினைத்து, காபியை அதிகம் குடிப்பர். ஆனால் அது முற்றிலும் தவறு. காபியில் இருக்கும் காப்பைன் என்னும் பொருள் மெக்னீசியமாக உடலில் மாறும் போது, தலைவலி வரும். அதிலும் அதிக அளவு காபி குடித்தால், அதிக அளவு தலைவலியானது வரக்கூடும்.
ஐஸ் கிரீம் :
ஐஸ் கிரீம் என்று சொன்னால் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் அதை சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிடுவார்களோ. உங்களுக்கே தெரிகிறது, பின்னர் என்ன? உண்மையில் நாம் ஐஸ் கிரீமை அல்லது ஐஸ் கலந்த பானங்களை உடல் சூடாக இருக்கும் போது குடிப்போம். இதனால் உடலில் இருக்கும் இரத்தக் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. ஆகவே அப்போது போதிய இரத்த சுழற்சி ஏற்படுவதில்லை. இதனால் தலைவலி ஏற்படுகிறது.
சோயா சாஸ் :
இப்போதெல்லம் நிறைய உணவுகளில் சுவைக்காக சோயா சாஸ் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அதிக அளவு சோயா சாஸ் கலந்துள்ள உணவுகளை உண்டால், தலைவலி ஏற்படும். மேலும் சோயா சாஸில் மோனோசோடியம் குளுட்டமேட் என்னும் பொருள் உள்ளது. இது தலைவலியை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், சோயா சாஸில் அதிக அளவு உப்பு உள்ளது, இது உடலில் வறட்சியை ஏற்படுத்தி, தலைவலியை உண்டாக்கும்.
ஆகவே தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள் என்றால், மேற்கூறிய உணவுகளையெல்லாம் அதிக அளவு உண்ணாமல் இருந்தால், ஆரோக்கியமாக வாழலாம்.
விரைவில் விஷ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகும் - கமல்ஹாசன்..!
உலக நாயகன் பத்ம ஸ்ரீ கமல்ஹாசனுக்கு இவ்வாண்டு இந்திய அரசின் மற்றுமொரு உயரிய விருதான பத்மபூசன் விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து தனது ரசிகர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் விஷ்வரூபம் -2 படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு கமல்ஹாசன் திரைத்துறைக்குச் செய்த பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.
அதைத்தொடர்ந்து தற்பொழுது அவருக்கு மற்றொரு உயரிய விருதான பத்மபூசன் விருது வழங்கப்படவுள்ளது.
இந்த விருது தனக்குக் கிடைத்ததற்காக தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். மேலும் தனது குரு, குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு இந்த விருதினை அர்ப்பணிப்பதாகவும் கூறியுள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த விஷ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமான விஷ்வரூபம்-2 திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இப்படம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.
விஷ்வரூபம்-2 படத்திற்காக கமல்ஹாசனின் ஏராளமான ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலக நட்சத்திரங்களும் காத்திருக்கின்றனர்.
அறுவகைச் சுவை என்ன என்ன..?
அறுவகைச் சுவை என்ன என்ன?
காரம்:
உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்பு:
உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.
இனிப்பு:
உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்பு:
இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
துவர்ப்பு:
இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
உப்பு:
ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது
கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி..!
பார்த்திபன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி.
வித்தகன் படத்தினை தொடர்ந்து ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என்ற வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார் இயக்குனர் பார்த்திபன்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை. ஆனால் அவரது மகள் கீர்த்தனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதுதவிர விஜய்சேதுபதி ஒரு முக்கியமான கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
மேலும் சினிமா பற்றிய கதை என்பதால் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் சிம்பு- நயன்தாரா திருமணம்..!
பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா–சிம்பு திருமண காட்சி இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ராஜா ராணி படத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஆர்யாவும், நயன்தாராவும் திருமணம் செய்வது போல் காட்சி வைக்கப்பட்டது. அதை போஸ்டராக அச்சிட்டு வெளியிட்டும் படத்துக்கு விளம்பரம் தேடினர்.
அது போல் இந்த படத்தில் காட்சி வைக்கிறார்கள். சிம்புவும், நயன்தாராவும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வது போல் இக்காட்சியை எடுக்கப் போகிறார்களாம். இந்து கோவில் ஒன்றில் இதை படமாக்க உள்ளனர். செட் போட்டு எடுக்கலாமா அல்லது நிஜ கோவிலிலேயே படமாக்கலாமா என்று பரிசீலனை நடக்கிறது.
சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தார்கள். அடுத்து நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டு திருமணம் வரை வந்தார்கள். கடைசியில் இதுவும் முறிந்து போனது.
தற்போது நயன்தாரா, சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார். சிம்புவும் பிசியான நடிப்புக்கு மத்தியில் ஹன்சிகாவை காதலித்து வருகிறார்.
ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்... குறைந்த செலவு..! அதிக லாபம்..!
சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் பலரும் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை மார்க்கெட்டிங். தரமான பொருள் தயார், ஆனால், அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடியவில்லையே என்கிற கவலை பலருக்கு.
நாம் தயாரிக்கும் பொருள் அல்லது வழங்கும் சேவை பற்றி பலருக்கும் எளிதில் சென்று சேரும் ஓர் எளிய மார்க்கெட்டிங் கருவியாக மாறி இருக்கிறது ஃபேஸ்புக்.
இன்றைய உலகில் காலையில் எழுந்தவுடன் முகம் கழுவுகிறார்களோ இல்லையோ, கம்ப்யூட்டரில், லேப்டாப்பில், ஸ்மார்ட் போனில் முகநூலைத் (ஃபேஸ்புக்) திறந்து பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பலர். நண்பர்களின் வட்டத்தை அதிகப்படுத்த பலரும் பயன்படுத்திவந்த ஃபேஸ்புக், இப்போது மிகச் சிறந்த மார்க்கெட்டிங் மேடையாக மாறி இருக்கிறது. தாங்கள் செய்துவரும் தொழிலை ஃபேஸ்புக் மூலம் வெற்றிகரமாக மார்க்கெட்டிங் செய்து, விற்பனையை அதிகரித்து எக்கச்சக்கமாக லாபத்தையும் சம்பாதித்து வருகிறார்கள்.
நாம் செய்யும் தொழிலை ஃபேஸ்புக் மூலம் கொண்டு செல்லும்போது, கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?, எப்படி முறையாக ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்கை மேற்கொள்வது? இதில் இருக்கும் சாதக, பாதகங்கள் என்னென்ன? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இது குறித்து பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் சமூக வலைதளங்களுக்கான பிரிவின் தலைவர் கே.எஸ்.ராஜசேகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
மார்க்கெட்டிங் செய்ய புதிய களம்!
''இன்றைக்கு ஃபேஸ்புக் பக்கங்களில் பல பிசினஸ் புரொஃபைல்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை மார்க்கெட்டிங் செய்ய புதிய களமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.
பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் மூத்தக் குடிமக்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஃபேஸ்புக்கில் உலக அளவில் மொத்தம் சுமார் 1.2 பில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்திய அளவில் சுமார் 82 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். இவர்களை ஆதாரமாகக்கொண்டு, ஒருவர் செய்யும் தொழிலை இவர்கள் மத்தியில் பிரபலப்படுத்த முடியும். அதற்கென தனியாக பிசினஸ் பக்கங்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.
எப்படி உருவாக்குவது?
தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினர்களும் அவரவர்களின் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை மையமாக வைத்து பிசினஸ் பக்கங்களை ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கலாம். இதற்கென எந்த விதிமுறைகளும் கிடையாது. கட்டணமும் கிடையாது.
ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது புராடக்ட்களை மார்க்கெட்டிங் செய்வதற்காக களம் இறங்கும்போது, அதை மட்டுமே தொடர்ந்து செய்யாமல் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள் குறித்த விவரங்களையோ, அவர்களின் தொழில் சார்ந்த தகவல்களையோ பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யும் விவரங்கள் பயனாளர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் தொழிலுக்கான வாடிக்கையாளர்களாக சீக்கிரமாகவே மாறிவிடுவார்கள்.
செய்யப்படும் பதிவுகள் சாதாரணமாக இல்லாமல் தொழில் குறித்த உண்மைத்தன்மையை நிரூபிக்கும் விதமாக இருக்கவேண்டும். அப்படி தெரியப்படுத்தும் தகவலானது புகைப்படங்களாகவோ, வார்த்தைகளாகவோ இருக்கலாம். வார்த்தைகள் என்கிறபோது ஐந்து வரிகளுக்குள் சுருக்கமாகச் சொல்வது நல்லது. புகைப்படங்களாக இருந்தால் அந்தப் புகைப்படம் நீங்கள் சொல்லும் தகவல் பயனாளர் களுக்கு சென்று சேரும்விதமாக இருக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பயனாளர்கள் படிக்க வருவதில்லை; ஸ்கேன் செய்ய வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் சாத்தியமாகும்.
கூகுளுடன் சாம்சங் ஒப்பந்தம்...!
இன்று இணையதளத்தின் ஜாம்பவான் கூகுளுக்கும் மொபைல் உலகின் ஜாம்பவான் சாம்சங்கிற்கும் ஒர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அது என்னவென்றால் அந்த இரண்டு கம்பெனிகளும் கூகுள் வசமுள்ள ஆண்ட்ராய்டை சாம்சங் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் ஒப்பந்தம் தான் அது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் 10 ஆண்டுகள் கூகுளின் ஆண்ட்ராய்டு வசம் இருக்கும் அதற்கான பங்கினை இது கூகுளுக்கு வழங்க வேண்டும் என்பதாகும்.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி இந்த இரு கம்பெனிகளும் பின் வருங்காலத்தில் மோதிக் கொள்ளாது எனவும் தெரிகிறது.
எது எப்படியோ இனி சாம்சங்கும் கூகுளும் நண்பேண்டா...
மொராக்காவோவில் சண்டை போடவிருக்கிறார் ஜீவா..!
பிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா மற்றும் துளசி இணைந்து நடித்துவரும் திரைப்படமான யான் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் சில பாடல் காட்சிகள் மொராக்காவோவில் படமாக்கப்படவுள்ளன.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகிவரும் இத்திரைப்படத்தினை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம்
தயாரித்துவருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையைத்துவருகிறார்.
பிரகாஷ்ராஜ், நாசர், பிரேம்ஜி அமரன், தம்பி ராமைய்யா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துவரும் இத்திரைப்படத்தின் பல காட்சிகள் சென்னை, மும்மை மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே படமாக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய சில சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் மொராக்கோவில் படமாக்கப்படும்.
இக்காட்சிகளைப் படமாக்க படக்குழு மொராக்கோ செல்லவிருக்கிறது. மொராக்காவோவில் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் விரைவில் திரைப்படம்
வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையோ உண்மை...!!!
1.காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண நெறயா செலவு செய்ய வேண்டியிருக்கும்...
2.சாப்பிடுகையில் கடைசியாய் ஒன்று என்றதும் இருப்பதில் பெரிய தோசையை தேடுபவள் -அம்மா.
3.இந்தியாவில் வரிசைகள் மிக நீளமாக இருப்பதற்கு தொப்பையும் ஒரு காரணம் ..
4.Facebook-ல நல்லவனா நடிப்பது வேஸ்ட். இங்க யாரும் உங்களுக்கு பொண்ணோ , கடனோ கொடுக்கப் போவதில்லை ...
5.சென்னை மாவட்ட எல்லை ஆரம்பம் என்ற எழுதியுள்ள தட்டிகளுக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் என எழுதி வைக்கலாம்...
6.காதல் தோல்வியை கொண்டாடவும் ஒருநாள் இருந்தால் மொத்த உலகமும் அதை கொண்டாடித் தீர்க்கும் நாளாக அது இருக்கும்....
7.தான் அழகாக இல்லை என்று நினைக்கும் ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையை நீக்குவது ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையே
8.என் பட்டினியை தவிர, எந்த தவறையும், மன்னித்துவிடுகிறாள் என் தாய்.
9.கண்ணுக்கு தெரியாத கடவுளை வேண்டிக்கொண்டு, அம்மா விபூதி வைத்துவிடும் போது,
அருகிலேயே
தெரிகிறது கடவுள்...
10.எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா உன்ன நான் காப்பாத்துறேன் என்று சொல்வதில்லை ..
நேற்று வெளியானது விஜய் ஆண்டனி நடிக்கும் சலீம் பாடல்கள்..!
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நான் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் உருமாறினார்.
நான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவர் நடித்துவரும் திரைப்படம் சலீம். இயக்குனர் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிவந்த என்.வி. நிர்மல்குமார் இப்படத்தை இயக்கிவருகிறார். ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ், ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினைத் தயாரித்துவருகின்றன.
நான் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்ததைத் போலவே, இப்படத்திற்கும் விஜய் ஆண்டனியே இசையைமைத்துள்ளார். நேற்று அவரது இசையில் உருவாகிவரும் சலீம் படத்தின் இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சிவசம்போ எனத் துவங்கும் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பாடலாக வலம்வருகிறது. நேற்று வெளியான இரண்டு பாடல்களுமே படத்தின் இசை வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளன.
பான் கார்டு விண்ணப்பிக்க புதிய நெறிமுறை : வருமானவரித்துறை
வரும் பிப்ரவரி 3ம் தேதி முதல் பான் கார்டு விண்ணப்பித்தலை நெறிமுறைபடுத்துகிறது வருமானவரித்துறை...
இனி பான்கார்டு விணணப்பிக்க விரும்பும் நபர் தன்னுடைய
1.அடையாள அட்டை
, 2.இருப்பிடச் சான்று,
3.பிறந்த தேதியை உறுதி செய்யும் ஆவணம்
ஆகியவற்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும்,பான் கார்டு விண்ணப்பிக்கும் மையங்களில் உங்கள் அசல் ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது நகலோடு இணைத்து சமர்பிக்க வேண்டும்.சரிபார்த்தலுக்கு பிறகு விண்ணப்பிக்கும் நபரிடம் அசல் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
புதிதாக பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு:
1.தனியார் அல்லது ஏஜென்ட் மூலம் பான் கார்டு விண்ணப்பிக்கும் போது அசல் ஆவணங்கள் தொலைய வாய்ப்புள்ளதால் கூடிய வரையில் நீங்கள் நேரடியாக பான் கார்டு விண்னப்பிக்கும் மையங்களில் விண்ணப்பிப்பது நல்லது.
2.நீங்கள் விண்ணப்பிக்க அளிக்கும் அசல் ஆவணங்களை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால் சற்று கவனமாக செயல்படுவது அவசியம்.
3.நீங்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் போது சேவை வரி ஏதுமின்றி விண்னப்பிக்கலாம்..
விக்ரம் என்னதான் பண்றார்..?
விக்ரம்... கமலுக்கு நிகராக வருவார் எனப் பேசப்பட்ட நடிகர்.
இப்போதும் கமலைப் போன்ற திறமைசாலியாக இருந்தும், அடிக்கடி அவர் எடுத்துக் கொள்ளும் நீண்ட இடைவெளி காரணமாக ரசிகர்களிடம் மீண்டும் மீண்டும் தன்னை நினைவுபடுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்து வேகமாக படம் பண்ண வேண்டும்... ரிலீஸ் பண்ண வேண்டும் அவர் நினைத்தாலும் அதெல்லாம் நடப்பதில்லை. விக்ரம் என்னதான் பண்றார்? இந்த நிலை அவருக்கு அந்நியனில்தான் ஏற்பட்டது. அந்தப் படம் வெளியாக இரண்டு முழு ஆண்டுகள் தேவைப்பட்டது.
அடுத்தடுத்து படங்கள் பண்ண அவர் முடிவு செய்த நேரத்தில் பீமாவில் மாட்டிக் கொண்டார். இல்லை.. இனி இப்படி நடக்காது என அறிவித்துவிட்டு, மீண்டும் அவர் சிக்கியது கந்தசாமியில். கன்னித்தீவு கதை மாதிரி இழுத்துக் கொண்டே போன அந்தப் படம் ஒருவழியாக ரிலீசானபோது, விக்ரமுக்கு வயது ஏறியதுதான் மிச்சம். படம் கெட்டபெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்தது.
தெய்வத் திருமகள், தாண்டவம் என அடுத்தடுத்து படம் பண்ணவர், மீண்டும் ஷங்கரின் பிரமாண்டத்தில் சிக்கியுள்ளார். 2012-லிருந்து விக்ரமுக்கு எந்தப் படமும் வெளியாகவில்லை. ஐ படம் ஏப்ரலில் வருமா... மேயில் வருமா என்று தெரியவில்லை.
பிப்ரவரி இறுதியில்தான் படப்பிடிப்பே முடியும் என்கிறார்கள். அடுத்து என்ன செய்யப்போகிறார்? மீண்டும் தரணியுடன் கைகோர்க்கிறார் விக்ரம்.
ஷங்கர் படத்துக்காக உடம்பைக் குறைத்து நோஞ்சானாக மாறியவர், இப்போது தரணி படத்துக்காக இயல்பான நிலைக்குத் திரும்பப் போகிறார்.
மோகன்லாலுக்கு ஜோடியான சிம்ரன்..!
திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆனவர்களைக் கூட பாரபட்சம் காட்டாமல் ஹீரோயினாக்கி சந்தோஷப்பட்டுக் கொள்ளும் மலையாள சினிமா. அந்த வரிசையில் சிம்ரனும் சேர்ந்திருக்கிறார்.
தேவயானி திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு மோகன்லால் ஜோடியாக ‘பாலேட்டன்’ படத்தில் நடித்தார். அதேபோல் மீனாவுக்கும் ஒரு ஹீரோயின் ரோல் மலையாளத்தில் கிடைத்திருக்கிறது.
சிம்ரனை மட்டும் விட்டு வைப்பானேன். ஜீத்து ஜோசப்பின் புதிய படத்தில் மோகன்லால் ஜோடியாக சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
மலையாள சினிமாவின் நவீன இயக்குனர்களில் ஜீத்து ஜோசப்பும் ஒருவர். இவரின் ‘மெமரிஸ்’ படம் ஆகஸ்ட் 9-ம் தேதி ரம்ஜானுக்கு வெளியாகிறது.
போலீஸ் அதிகாரி ஒருவர் ஆல்கஹாலுக்கு அடிமையாவதுதான் படத்தின் கதை. பிருத்விராஜ் தான் ஹீரோ. 'மும்பை போலீஸ்' படத்தில் போலீஸாக நடித்த சூட்டோடு இதிலும் போலீஸாக நடித்திருக்கிறார்.
ரம்ஜானுக்கு வெளியாகும் நான்கு படங்களில் மெமரிஸுக்குதான் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறதாம் கேரளாவில்.
காமராசர் - வாழ்க்கை வரலாறு
காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநிலம் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தொடக்ககால வாழ்க்கை
காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.
தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார்.
சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
சிறை வாழ்க்கையும் படிப்பும்
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.
ராசாசியி தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசு கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடு அவர்களின் வாத திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார்.
1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார்.
அரசியல் குரு
மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.
தமிழக அரசியல்
தமிழக ஆட்சிப் பொறுப்பு
1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.
அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், - சா. கணேசன், - இராஜாஜி - பாகனேரி பில்லப்பா, - காமராசர், - ரா. கிருஷ்ணசாமி நாயுடு
அமைச்சரவை
காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)
அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
ராசாசி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.
காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
- பாரத மிகு மின் நிறுவனம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
- இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
- நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
- கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
- மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.
அகிலஇந்திய காங்கிரசு தலைமை
மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு.
இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.
அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் சவகர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாசுதிரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.
இறுதிக் காலம்
காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார்.
தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.
அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
நினைவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவருக்கு பெருந்தலைவர் காமராசர் நினவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள்
2004-ஆம் ஆண்டு காமராசு என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
காமராசர் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்
“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராசு, காமராசு மகாபுருசர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி
"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராசர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். -நேரு
“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" -பெரியார்.
“காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.” -இந்திரா காந்தி
"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்." -சிதம்பரம் சுப்ரமண்யம்
"காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- ம. கோ. இராமச்சந்திரன்
"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."- கருணாநிதி
"காமராசர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், சுதந்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.
நகைச்சுவை!
1) கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே?
மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க?
கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்...
மனைவி: ????
2) மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.
கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”
மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”
கணவன் :????
3) டீச்சர்: உன்பேருஎன்ன..? -
மாணவி : " சௌமியா"
டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?
மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
டீச்சர் : ????
4) டாக்டர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
பேசன்ட் :"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
டாக்டர்: ????
5) மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
மாப்பிள்ளை வீட்டார்:???
6) ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.
மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்.
ஆசிரியர் : ?
7) ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?
மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!
ஆசிரியர் : ???
வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
வாத்தியார் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானும் எழுந்து நின்றேன்.
வாத்தியார் : ????
உண்மையான பார்வை..!
உண்மையான பார்வை..!
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், " ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று சொன்னார்.
சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து "ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?" என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ "ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு சென்றான்" என்றார்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் "வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி "மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்." என்று சொன்னார்.
அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் "துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொன்னீர்கள்" என்று கேட்டான். அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது" என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.
தூதுவளை தோசை - சமையல்!
தேவையானவை:
புழுங்கலரிசி - 1 கப்,
தூதுவளை இலை - 15,
மிளகு - 10,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் + நெய் - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியிலோ, ஆட்டுக்கல்லிலோ பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும்.
பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி நெய் + எண்ணெயைக் கலந்து அதை சுற்றிவர ஊற்றி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை. ஆனால், சூடாக சாப்பிட்டால்தான் சுவை.
மரணத்திற்கு பின் நடப்பது என்ன..?
மரணத்திற்கு பின் நடப்பது என்ன..?: அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் சுவாரஸ்ய தகவல்
மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.
மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல்களிலும் விரிவாக எழுதப்படவில்லை.
அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் கூறி இருப்பதாவது:-
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும் போது நான் ஒரு செவிலியர் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சந்தித்தேன். டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற்காலியில் அமரும் அளவிற்கு குணம் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் திடீரென அவர் நினைவிழந்து விழுந்தார். அவரது உடல் குளிர்ந்தது. எனது எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை. வெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. நான் உடனடியாக அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்தபின், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவிலியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம்.
மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டாம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்பவில்லை.
பின்னர் நினைவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்ட போது நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரிவித்தார். முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் கண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியில்லாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார். அடுத்த நொடியே மருத்துவமனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந்ததாக அவர் தெரிவித்தார்.
அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார். டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னையும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார்.
அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவியைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக பின்னர் அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச்சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.
டாம் நினைவிழுந்து படுக்கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொண்டு இருந்தேன். திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெரபி மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்ப போக சொன்னதாகவும் அதன் பின் அவர் மிதந்து வந்து அவரது உடலுக்கு திரும்பியதாகவும் டாம் கூறினார்.
மேற்கண்ட இந்த அனுபவங்கள் உட்பட மேலும் பலரது மரண அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.
Subscribe to:
Posts
(
Atom
)


























No comments :
Post a Comment