சூப்பர் நிலவு வெள்ளிக் கிழமை தோன்றும்..! மிஸ் பன்னாதிங்க....

No comments


சூப்பர்நிலவு வெள்ளிக் கிழமை தோன்றும்! மிஸ்பன்னாதிங்க....


பூமி, சூரியன் சந்திரன் ஆகியமூன்றும் ஒரே நேர் கோட்டில்சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிகழ்வால் வழக்கத்தைகாட்டிலும் நிலவின் அளவு பெரிதாககாணப்படும்.

 இத்தைய நிகழ்ச்சிக்கு சூப்பர் நிலவு எனபெயிரிட்டு அழைக்கப் படுகிறது.அத்தகைய நிகழ்வு இந்தாண்டுஐந்து முறை நி்கழ்கிறது. இம்மாதம் முதல் தேதி நடந்துமுடிந்துள்ளது.

அடுத்த நிகழ்வு வரும் வெள்ளி்க்கிழமை(31-ம் தேதி) நடைபெறஉள்ளது. தொடர்ந்து ஜூலை 12, ஆகஸ்ட் 10,செப்டம்பர் மாதம் 9-ம்தேதி ஆகியநாட்களில் நிகழ உள்ளது.

 வரும் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி முதல் இதனைகாணலாம் என விண்வெளி பவுண்டேஷனின்தலைவர் தேவ்கன் தெரிவித்துள்ளார். மேலும்அடுத்த சூப்பர் நிலவு வரும்2018-ம் ஆண்டு ஜனவரியில் தான்தோன்றும் எனவும் அவை தெரிவித்துள்ளது.

பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டுஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில்சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது.

அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடையபிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும்வாய்ப்பு உள்ளது.

 அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார்30 வருடங்களுக்குமுன் கடந்த 1979ஆம் ஆண்டில் சூப்பர்நிலவு என்று ரிச்சர்டு நொள்ளேஎன்ற வானவியல் ஆராய்ச்சியாளரால் பெயரிடப்பட்டது.

இந்த ஆண்டு இதுபோன்று ஐந்துமுறைஇந்த மூன்று கோள்களும் ஒரேகோட்டில் வரும் வாய்ப்பு உள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் நிகழ்வு இந்தமாதம் ஒன்றாம் தேதி ஏற்பட்டது. தற்போது வரும் வெள்ளிக்கிழமை அன்றுஇரண்டாவது முறை சூப்பர் நிலவுதோன்றும் என்றும் மாலை 3.30 மணிக்குஇதனைக் காண முடியும் என்றும்விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

 அந்த சமயத்தில் நிலவின் அளவு 14 சதவிகிதம்பெரியதாகவும், 30 சதவிகிதம் அதிக பிரகாசமாகவும் காணப்படும்என்று அந்த அமைப்பின் தலைவர்சி.பி.தேவ்கன் குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment